மாவட்ட செய்திகள்
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, டி ஆர் ஓ காமாட்சி கணேசன்,ஆர்டிஓ முருகன், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன்,மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டாம்.பி. சைலஸ், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, எம்எல்ஏ முருகவேல்,முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் திவாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் ,பேரூராட்சி தலைவர் ஷாஜகான், கவுன்சிலர் மோகன்தாஸ் உட்பட வேளாண்மைத்துறை அதிகாரிகள் ,கட்சி நிர்வாகிகள்,விவசாயிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
