BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி  அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ஆர்.தர்ம ரஜினி எழுதிய  மீன்பிடி தொழில் முனைவோரின் ஊக்குவிப்பு காரணிகள் என்ற நூல் வெளியீட்டு விழா.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ஆர்.தர்ம ரஜினி எழுதிய கன்னியாகுமரி மாவட்டத்தில்கடல் மீன்பிடி தொழில் முனைவோரின் ஊக்குவிப்பு காரணிகள் என்ற நூல் வெளியீட்டு விழா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்தது இந்த நூலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிச்சுமணி வெளியிட்டார் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ்.திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி தலைவர் மணி ,செயலாளர் ராஜன் ,பொருளாளர் சுப்பிரமணியன்,கல்லூரி முதல்வர் ராஜசேகர் மற்றும் அய்யாவழி சமய தலைவர் பால பிரஜாபதிஅடிகளார் உட்பட பலர் இந்த நூலை எழுதிய ஆர்.தர்ம ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )