மாவட்ட செய்திகள்
8 பவுன் நகை, ரொக்கம் திருட்டு.
உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (42). பாத்திர கடை நடத்தி வருகிறார். இந் நிலையில் இன்று காலை கடையைத் திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அவர் பின்னர் கடைக்குள் சென்று பீரோவை திறந்து பார்த்த போது உள்ளே வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகையும் ரொக்கம் ரூபாய் 55 ஆயிரமும் கொள்ளை போய் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.