BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஐஐடி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை !

சென்னை ஐஐடி யில் படித்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவரை கடந்த 2017ஆம் ஆண்டு அவருடன் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் மேலும் ஆசிரியரிடம் இவ்வாறு நடந்ததை கூறியுள்ளார் இருப்பினும் ஆசிரியர் ஒன்றும் செய்யவில்லை.

அதன் பிறகு ஐஐடி யில் புகார் அளித்தார் அதுவும் ஒன்றும் பலனளிக்கவில்லை அதன் பிறகு தமிழக மாநில மகளிர் ஆணைய தலைவரிடம் புகார் அளித்தார் மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தப்பட்டது.

மேலும் விசாரணையில் கிங்ஷா என்ற முன்னாள் ஐஐடி மாணவன் வயது 30 கைது செய்யப்பட்டார் மேலும் இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது இதில் இன்னும் பலர் சம்மந்தப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )