மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறையில் அ.ம.மு.க ஆலோசனை கூட்டம் துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பேச்சாவாடி ராஜ் மஹாலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் அமமுக தலைமை நிலைய செயலாளர் சண்முகவேலு, அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, மாநில விவசாய அணி துணை செயலாளர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வாய்மை இளஞ்சேரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அ.ம.மு.க. மாநில துணை பொதுச் செயலாளரும், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளருமான ரங்கசாமி கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் தமிழகத்தில் மக்களின் நலனுக்காக டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியுள்ளார். நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நமது கழகம் தமிழகத்தில் மூன்றாம் இடம் பிடித்து வலுவான நிலையில் உள்ளது. இது தமிழக மக்கள் டிடிவி தினகரன் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை காட்டுகிறது. வரும் காலங்களில் தமிழகத்தில் மக்கள் செல்வர் ஆதரவு இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது. அதற்கு கட்சி நிர்வாகிகள் கடுமையாக பாடுபட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சாதிக் பாட்ஷா, கழக இணைச் செயலாளர் அமுதவல்லி, துணை செயலாளர்கள் சிவா, பூங்குழலி, மாவட்ட பொருளாளர் பாரதிராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்வாணன், சரவணன், நேரு, ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், அசோகன், பரமேஸ்வரன், புகழேந்தி, சரவணன், மோகன், விஜயன், ஆனந்த், கோபி, ரியாஸ் ராஜா, தாமஸ், சீர்காழி நகர கழக செயலாளர் அருண் பாலாஜி, மயிலாடுதுறை நகர கழக செயலாளர் ஆர்.ஆர்.ராஜ் என்கின்ற ராமராஜன், மாவட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் முனிஷ் குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாலாஜி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஜெய.வினோத், மாவட்ட மகளிரணி செயலாளர் ராதிகா, அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் சிவா, மாவட்ட மகளிரணி செயலாளர் ஹமீது மரைக்காயர், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் குருமூர்த்தி, கொள்ளிடம் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகி சரவணப்பெருமாள், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் செயலாளர் ராதா, மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் தீபா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆனந்த், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் வரதன், பேரூர் கழக செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கல்யாணம், செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மயிலாடுதுறை நகர கழக செயலாளர் ராமராஜன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
