மாவட்ட செய்திகள்
நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட்ட பார்வர்ட் ப்ளாக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை மற்றும் தொழிலாளர்கள் விரோத சட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மத்திய அரசை கண்டித்து பார்வர்ட் ப்ளாக் கட்சியினர் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
