மாவட்ட செய்திகள்
378 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் நகரின் 98 கிராமங்களுக்கு கிராமம் ஆகிய மேட்டுப்பட்டியில் 375 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன், பகவதி அம்மன், லட்சுமிவிநாயகர் திருக்கோயில் பங்குனி உற்சவ விழா நடைபெற்றது.
அதன்படி முக்கிய நிகழ்வான கொடியேற்றம் இன்று கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில்ஞ காளியம்மன் திருவுருவம் பொறித்த கொடி ஏற்றி திருவிழா தொடங்கியது. முன்னதாக உலக நன்மை வேண்டி யாக பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 3ம்தேதி பூச்சொரிதல் விழா, 6-ஆம் தேதி பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து எட்டாம் தேதி ஊஞ்சல் விழா 9ஆம் தேதி தெப்ப திருவிழா 12ந் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும்.
திருவிழாவில் திண்டுக்கல் மதுரை தேனி கரூர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஊர் நாட்டாமை அழகர்சாமி போர்குடி சேர்வை பெரியசாமி கோவில் பூசாரிகள் காளிதாஸ் கைலாசபதி மற்றொரு செயற்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.