BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மதர்தெரசா பவுண்டேசனில் திரு நங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

மதர்தெரசா பவுண்டேசனில் திரு நங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தஞ்சாவூர். மார்ச்.30 -தஞ்சாவூர் மாதா கோட்டை மதர் தெரசா பவுண்டேசன் சர்வதேச திருநங்கையர் தினத்தை முன்னிட்டு திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றவர்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மதர் தெரசா பவுண்டேசனில் நடைபெற்றது.

 

தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திருநங்கைளுக்கு சர்வதேச திருநங்கைகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் திருநங்கைகள் வேலைக்கு சென்றும், தொழில் செய்தும் தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டுமென்று
மதர் தெரசா பவுண்டேசன் சார்பாக ரூபாய் 2,60,000/- மதிப்பில் திருநங்கை சில்பாவிற்கு ஒரு கறவை மாடும்.,ஏழு நடன திருநங்கைகளுக்கு நடன பொருட்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பத்து திருநங்கைகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களும், மாற்றுத் திறனாளி ஒரு நபருக்கு வில் சேரும், இரண்டு நபருக்கு காது கருவியும், ஒரு நபருக்கு தையல் இயந்திரமும், ஒரு நபருக்கு செயற்கை காலும், இரண்டு பேருக்கு மூன்று சக்கர சைக்கிளும். படிக்கும் மாணவி ஒருவருக்கு பள்ளி செல்வதற்கு சைக்கிளும் மற்றும் திருநங்கை திவ்யாவிற்கு மதர் தெரசா பவுண்டேசனில் சமையலர் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணை போன்றவைகளும் மேயர் சண்.ராமநாதன் வழங்கி பவுண்டேசனின் சேவைகளைப் பாராட்டி சிறப்புரையாற்றினார். பவுண்டேசனில் பணியில் சேரும் முதல் திருநங்கை திவ்யா என்பது குறிப்பிடத்தக்கது.


விழாவில் கலந்துகொண்ட அனைத்துத் திருநங்ககைளுக்கும் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. தஞ்சையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்காக கடந்த பத்து ஆண்டுகளாக சிறந்த முறையில் பணி யாற்றி வரும் திருநங்கைகளின் தலைவி நளினிக்கு பவுண்டேசன் சார்பாக மேயர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். திருநங்கைகள் அனைவரிடமும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்குத் தேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்ட சமூகநல அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். பவுண்டேசன் தலைவர் சவரிமுத்து வரவேற்புரையாற்றி திருநங்கைகள் கௌரவத்துடன் வாழ்வதற்கு உற்சாகமூட்டினார்.

அறங்காவலர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி. விஜி மற்றும் தன்னார்வ தொண்டர்கள் வினோதினி, கிறிஸ்டி, மகேஷ்வரன் ஆகியோர் விழாவிற்கான ஏற்படுகளை செய்திருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )