மாவட்ட செய்திகள்
திருவள்ளூர் என்.ஆர்.ஜி.எஸ். திட்டத்தின் கீழ் ரூபாய் 22 லட்சம் மதிப்பில் இரண்டு ஏக்கரில் சுடுகாடு எரிமேடை மற்றும் சுற்றுச்சுவர் திறப்பு விழா.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட அலமாதி முதல்நிலை ஊராட்சி கோவிந்தபுரத்தில் என்.ஆர்.ஜி.எஸ். திட்டத்தின் கீழ் ரூபாய் 22 லட்சம் மதிப்பில் இரண்டு ஏக்கரில் சுடுகாடு எரிமேடை மற்றும் சுற்றுச்சுவர் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம், சோழவரம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவரும் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மீ.வே.கர்ணாகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சுடுகாடு எரிமேடை, சுற்றுச்சுவரை திறந்து வைத்தனர்.
இதில் கீதாராமன், வார்டு உறுப்பினர்கள் அருண், கன்னியம்மாள், அசோக் சக்கரவர்த்தி, லட்சுமி மோகன், தனலட்சுமி திருநாவுக்கரசு, சுரேந்திரன், பாரதி சந்திரன், ரகு உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
