மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள் விவசாயி ஒருவர் முழு நிர்வாணமாக காணப்பட்டதால் பரபரப்பு.

மேகதாது அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ம் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் பயிருக்கு அறிவித்த படியினை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அய்யாக்கண்ணு தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டை ஓடுடன் 200க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே புகுந்த விவசாயிகள் போலீசாருடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதில் ஒரு விவசாயி முழு நிர்வாணத்துடன் பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது பின்பு போலீஸார் பேச்சுவார்த்தை அடுத்து பின்பு அங்கிருந்து கலைந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
