BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

இலவச மின் இணைப்புக்காக பதிவு கட்டணம் செலுத்தி 6 ஆண்டுகளாக காத்திருக்கும்  விவசாயி ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

இலவச மின் இணைப்புக்காக பதிவு கட்டணம் செலுத்தி 6 ஆண்டுகளாக காத்திருக்கும் தனக்கு உடன் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை அருகே வேங்கராயன்குடிகாட்டை சேர்ந்த விவசாயி பாண்டியராஜ் என்பவர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எனக்கு சொந்தமான கிணறு நாஞ்சிகோட்டை கிராமத்தில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இலவச மின் இணைப்பு பெறுவதற்கு நுழைவு கட்டணமாக ரூ.50 ஆயிரம் பதிவு அடிப்படையில் பதிவுக் கட்டணமாக ரூ.500 செலுத்தி அதற்கான ரொக்க ரசீது பெற்றுக் கொண்டேன். இந்நிலையில் எனக்கு பிறகு மின் வாரியத்தில் பதிவு செய்த பக்கத்து நிலத்தின் உரிமையாளருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்த தொடர்புடைய மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று விவரம் கேட்டேன். அதற்கு அவர்கள் உங்களிடம் இருப்பது போலி ரசீது. அதனால் மின் இணைப்பு வழங்க இயலாது என்று கூறிவிட்டனர். கடந்த 6 ஆண்டுகளாக மின் இணைப்பு பெற காத்திருக்கிறேன். எனவே முறையான விசாரணை நடத்தி தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ‌இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )