BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சமூகவலைதளங்களில் விதிமுறைகளை பின்பற்றாமல் பிரச்சாரம் செய்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை …

திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைத்தார்.
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு :

வரிசை பிரகாரம் எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டுமோ அந்த பணிகள் துவக்கப்பட்டடுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதி வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் பாதி இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது – இன்று அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

வெளி மாவட்டத்தில் தங்கியிருந்து திருச்சி மாவட்டத்தில் வாக்கு இருக்கும் சுமார் 2450 தபால் ஓட்டுகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது விதிமுறைகளை பின்பற்றாமல் யாரும் செயல்பட்டால் கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளி அரங்குகளில் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தற்போது சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சுவர் விளம்பரம் செய்ய எங்கும் அனுமதி இல்லை அப்படி சுவர் விளம்பரம் செய்து இருந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )