மாவட்ட செய்திகள்
வேலூர் அணைக்கட்டு பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்கமான வாகன சோதனையில் ஹான்ஸ் கூல்லிப், 1000 கிலோ குட்கா போதைப் போதைப் பொருட்கள் பறிமுதல்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார் அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த TATA SAFARI TN.20.AL.0909 வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் கூல்லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார் 35 மூட்டைகளில் கடத்தி செல்லப்படுவது தெரியவரவே உடனடியாக வாகன ஓட்டுனரை கைது செய்து TATA SAFARI வாகனத்தை பறிமுதல் செய்து பள்ளிகொண்டா காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர்
மேலும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சாவாய் சிங் வ/31 என்கின்ற நபரை கைது செய்து பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் மூன்றாவது முறையாக இதுவரை சுமார் 1000 கிலோ குட்கா போதைப் போதைப் பொருட்கள் பள்ளிகொண்டா காவல்துறையினர் சுங்கச்சாவடியில் பறிமுதல் செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
