மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா தேர்வுநிலை பேரூராட்சியில் இன்று முதல் கவுன்சிலர்கள் கூட்டம்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா தேர்வுநிலை பேரூராட்சியில் இன்று முதல் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ பி நந்தகுமார் அவர்கள் பங்கேற்றார் மேலும் அவருடன் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு அணைக்கட்டு திமுக ஒன்றிய செயலாளர்கள் குமார பாண்டியன் மற்றும் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

மேலும் பேரூராட்சி கவுன்சிலர்கள் மன்றத்தில் உரையாற்றிய அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அனைத்து வார்டுகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அனைத்து கவுன்சிலர்களும் திறன்பட செயல்பட வேண்டும் என்றும் எவ்வித கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் ஒன்றிணைந்து பேரூராட்சியை மேம்படுத்த செயல்பட வேண்டும் என்றும் அனைத்து வார்டு பொதுமக்களுக்கும் அரசால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களும் போய் சேர கவுன்சிலர்கள் உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் பேரூராட்சியில் உள்ள பொது நிதியை பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவையை போக்க முழு முயற்சி எடுத்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் பேரூராட்சி நிர்வாகமும் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேரூராட்சி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் தெருவிளக்குகள் சாலை பொது சுகாதாரம் உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களின் முதற் முழு கடமையாக நினைத்து முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை சென்னை பேரூராட்சிகள் இயக்கத்திலிருந்து தன்னால் முடிந்தவரை போராடி பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும் இந்த கூட்டத்தொடரில் பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி மற்றும் பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபப்பிரியா குமரன், பள்ளிகொண்டா பேரூராட்சி துணைத் தலைவர் வசீம் அக்ரம் மற்றும் 18 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
