BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தாராபுரம் நல்லதங்காள் ஓடையிலிருந்து பாசன வசதிற்காக மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தண்ணீர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திற்கு உற்பட்ட நல்லதங்காள் ஓடை நீர் தேக்கப் பாசனம் பகுதியிலுள்ள சுமார் 4,744 ஏக்கர் நிலங்கள் உள்ளன.இந்த பாசன நிலங்களில் வடகிழக்கு பருவ மலையின் காரணமாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிளும், மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் நல்லதங்காள் ஓடை நீர் தேக்கத்திலிருந்து நல்லதங்காள் பிரதானக் கால்வாய் மதகு வாயிலாக, இன்று 05.04.22 முதல் நாள் ஒன்றுக்கு 35 கன அடி விதம் 7 நாட்களுக்கு 21.17 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .வினித், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல. பத்மநாபன், மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ். வி. செந்தில்குமார், தாராபுரம் நகர செயலாளர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மூலனூர் பேரூர் கழக செயலாளர் தண்டபாணி, குளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் துரைசாமி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் திரலாக கழந்து கெண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )