மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தைலாராமன்மலை வனப்பகுதிகளில் காட்டுத் தீயானது 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பெருமளவில் பரவி எரிந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிவதால் அரியவகை மூலிகை செடிகள் மற்றும் அரியவகை மரங்கள் தீயில் எரிந்து நாசம் அடைந்து வருகின்றன.
எனவே வனத்துறையினர் இயற்கை வளங்களை பாதுகாக்க காட்டுத்தீயை உடணடியாக அணைத்து மேலும் பரவாமல் தடுத்து வனத்தையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES தேனி