BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தக்காளி வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மட்டுமல்ல நெல்லும் மத்திய மாநில அரசுகள் இலங்கைக்கு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயை நிதியாக வழங்காமல் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து வழங்கலாம் என பிஆர் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தக்காளி வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மட்டுமல்ல நெல்லும் கிராமங்களில் லட்சக்கணக்கான மூட்டைகளில் தேங்கி உள்ளதால் மத்திய மாநில அரசுகள் இலங்கைக்கு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயை நிதியாக வழங்காமல் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து வழங்கலாம் என பிஆர் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் தஞ்சை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி இரவோடு இரவாக ஊரான் பிள்ளையை 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விலை உயர்த்தி உள்ளது இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் கோடை சாகுபடிக்கு உரம் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .

எனவே பதுக்கல்காரர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தக்காளி வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மட்டும் அல்ல நெல் அறுவடை செய்து கிராமங்களில் பல லட்சக் கணக்கான மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டு வீணாகி வருகிறது எனவே இலங்கைக்கு 7,500 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கும் அரசு விவசாயிகளிடம் விளை பொருட்களை கொள்முதல் செய்து உணவு பொருட்களாக இலங்கைக்கு வழங்கினால் இலங்கைக்கு உதவி செய்ததை போல் தமிழக விவசாயிகளையும் பாதுகாக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )