மாவட்ட செய்திகள்
உயர்த்தப்பட்ட உரங்களின் விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், கள்ள சந்தையில் உரம் விற்பதை தடுக்க வேண்டும் என தஞ்சையில் பிஆர்.பாண்டியன் பேட்டி.


தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் செய்தியாளரிடம் பேசுகையில், மத்திய அரசு இரவோடு இரவாக DAP மூட்டை ஒன்றுக்கு 150 ரூபாயும், காம்ப்ளக்ஸ் உரத்திற்கு 100 ரூபாயும் உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.


கள்ள சந்தையில் உரம் முற்றிலும் பதுக்கப்பட்டுள்ளதாகவும், யூரியா போன்ற உரங்கள் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அதனை போக்கி விவசாயிகளுக்கு உரிய விலையில் தட்டுப்பாடுகள் இன்றி உரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், உரம் பதுக்கவதை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.


மேலும் கூறுகையில் இலங்கைக்கு இந்திய அரசு 7,500 கோடி ரூபாய் வழங்குவதை, பணமாக வழங்காமல் இந்தியாவில் உள்ள விவசாயிகளிடம் இருந்து வெங்காயம், தக்காளி, அரிசி உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து உணவு பொருட்களாக வழங்க வேண்டும். அப்போது தான் இங்கு உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
