மாவட்ட செய்திகள்
தஞ்சை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடம் சேதம் ஆனதையடுத்து பெற்றோர்கள் கோரிக்கை ஏற்று புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

தஞ்சை மாநகராட்சியின் கீழ் ஐந்து பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தொடர்ந்து புகார் வந்ததையடுத்து அந்த கட்டிடங்களை இடிக்க கூடிய பணி என்பது நடைபெற்று வருகிறது. தஞ்சை மாநகராட்சி 33வது வார்டு வண்டி கார தெரு பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடம் என்பது 1974-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.


அதற்கு பின்பு பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் முறையாக பராமரிக்கப்படாததால் கட்டிடங்களில் மரங்கள் வளர்ந்து இடிய கூடிய நிலையில் உள்ளது இந்த கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் வண்டிகார தெரு மாநகராட்சி பள்ளி வளாகத்தில் 5 வகுப்பு அறைகள் கழிப்பறை அலுவலகம் உள்ளிட்டவை கொண்ட கட்டிடம் கட்டுவதற்கு 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை தஞ்சை மேயர் ராமநாதன் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
