மாவட்ட செய்திகள்
பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலய 57 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா.

பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலய 57 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலய 57 ஆம் ஆண்டு பங்குனி உத்திரதீமிதி திருவிழாவையொட்டி அம்மனுக்கு பாலாபிஷேகம், கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி வருகிற 17ஆம் தேதி முக்கிய விழாவான தீமிதி திருவிழாவுடன் 10 நாட்கள் நடைபெற்று நிறைவு பெறுகிறது.
இன்று முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். குதிரை, யானை முன்செல்ல பக்தர்கள் பால்குடங்களை முக்கிய வீதிகளில் சுமந்து சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருக்கோயில் நிர்வாகிகளான அறங்காவலர் குழு தலைவர் மீ.வே.கருணாகரன், ப.சு.க. இளங்கோ, எஸ்.கர்ணா, வி.ஞானம், கே.வீரம்மாள், திருக்கோவில் விழாக்குழுத் தலைவர் எம்.வி. புண்ணியசேகரன், செயலாளர் சன் முனியாண்டி, பொருளாளர் எஸ்.ஞானப்பா, அன்னதானக் குழு நிர்வாகிகள் தலைவர் பி.அர்ஜுனன், செயலாளர் எஸ்.குணசேகரன், பொருளாளர் எஸ்.எல்.பார்த்திபன் உள்ளிட்ட திருக்கோயில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
