மாவட்ட செய்திகள்
தஞ்சையில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் 32 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிப்பதை ஒட்டி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இதில் கலந்து கொண்டவர்கள் தலைக்கவசம் அணிந்து பேரணியாக சென்றனர் தலைக்கவசம் அணிந்து தான் வாகனம் ஓட்ட வேண்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் சேட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் வாகனங்களில் செல்லும் போது அலைப்பேசியில் பேச கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.