முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோவில் 48-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோவில் 48 -ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவின் இறுதி நாளான இன்று 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவில் 48 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. 11ம் நாளான இன்று பக்தர்கள், மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்தும் , பொங்கல் வைத்தும், அம்மனுக்கு, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கடந்த ஜூலை 12ம் தேதி, முதுகுளத்தூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லி அம்மன் கோவிலில் காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்கியது.
ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் , பூச்சொரிதல் விழாவுக்காக காப்பு கட்டப்பட்டது. கம்பம் நடுதல், ஊஞ்சல் உற்சவம், சக்தி அழைப்பு, சக்தி கரகம் என தினமும், அம்மன் கோவில்களில், விழா கோலம் காட்சியளித்தது.
கோவிலில், காலையில் இருந்து ஆண், பெண், சிறுவர்கள் என்று அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து, தங்கள் நேர்த்திக்கடனைசெலுத்தினர்.
இவ்விழாவில் இறுதி நாளான இன்று முதுகுளத்தூர் , தூரி , செல்வநாயாகபுரம் , தட்டானேந்தல் ,வெண்ணீர் வாய்க்கால் , காக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், பெண்கள் வடக்கு வாசல் செல்வி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி தூக்கி, அய்யனார் கோவில், வழி விடுமுருகன் கோவில், பேருந்து நிலையம் வழியாகவும் முதுகுளத்தூர் நகரின் முக்கிய வீதி வழியாக சென்றனர்.
ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கண்காணிப்பு காமிரா மூலம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்