முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேசியகொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்களில் 78 வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன்தொடர்ச்சியாக கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் மௌதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதறையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சாரணர் இயக்கத்தின் மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.