ரணிப்பேட்டை சிஎம்சி நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்.
ராணிப்பேட்டை சிஎம்சி வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. பிரச்சாரத்தை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தொடங்கி வைத்தார். சிஎம்சி இயக்குநர் விக்ரம் மாத்தியூஸ் மற்றும் இணை இயக்குநர் தீபக் செல்வராஜ் உடன் இருந்தனர். மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் இயக்க கூடாது என உறுதி மொழி ஏற்றனர். சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். சிக்னல்களை கடந்து செல்லும் போது விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்பட கூடாது என வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு வேலூர் மாவட்ட சிஎம்சி மருத்துவ கல்லூரி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் விடுத்துள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
CATEGORIES ராணிப்பேட்டை
TAGS ranipetranipettairanipettai districtஇராணிப்பேட்டை மாவட்டம்தமிழ்நாடுமாவட்ட செய்திகள்ராணிப்பேட்டை