ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா
ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் நடந்தது மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலைக் கடை வேண்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா வைத்தியநாதனிடம் கோரிக்கை விடத்துள்ளனர்.
கோரிக்கை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமாரிடம் கோரிக்கை கொண்டு சேர்த்தனர். ஆலங்குடி ஊராட்சியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. குத்தாலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் கலந்து கொண்டு நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய ஆணையர் உமாசங்கர்,ஒன்றிய குழு உறுப்பினர் ராமதாஸ்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புனிதா மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.https://youtu.be/AcUM452DpTk