வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பாபநாசம் வங்காரம்பேட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு பரணிதரன் கனகா குடும்பத்தினர் சார்பில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் நடைபெற்றது.
முன்னதாக அம்பாள் பர்வதவர்த்திணி மற்றும் பரிவார தெய்வங்கள் பேச்சியம்மன்,காளியம்மன். மதுரைவீரன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்