வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருத்திகை முன்னிட்டு தேரடியில் இருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
மூலவர்களான வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியசாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
இதேபோல் மலை அடிவாரத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளியம்மைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது
கீழ் கோயிலில் உள்ள மூலவர்களான வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் கரிக்கப்பட்டு மஹா தீபாராதனை காண்பித்த பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர்.
ஆடி கிருத்திக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கையில் நீராடி பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி என உள்ளிட்ட பல்வேறு காவடிகளை சுமந்து கொண்டு மலை உச்சியை அடைந்து அரோகரா வழக்கமிட்டு முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆடி கிருத்திகை திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உற்சவ மூர்த்திகளான வள்ளி தெய்வானை சுப்ரமணியசாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சரவணப் பொய்கை தெப்பக்குளத்தில் மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர் அப்பொழுது பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க அரோகரா அரோகரா என கோஷங்களை எழுப்பினர் இந்த தெப்ப உற்சவம் மூன்று நாள் நடைபெறும்
திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர் மேலும் வருவாய்த்துறை சுகாதாரத்துறை தீயணைப்புதுறை மின்சாரத்துறை உட்பட பல்வேறு அரசு துறை சார்பில் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்திருந்தனர்.
கோயில் நிர்வாக சார்பாகவும் மற்றும் சிறு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.