வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பங்குனி உத்திர சிறப்பு பூஜை!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேட்டில் கிராம தேவதை ஸ்ரீ சுந்தரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் அனைத்து தெய்வங்களும் பரிவார மூர்த்திகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இதில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வள்ளி -தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியருக்கு காலை 7 மணி அளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் தீப, தூப ஆராதனைகள் நடந்தது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சுப்பிரமணியரை வழிபட்டனர். இந்த ஸ்ரீ சுப்பிரமணியருக்கு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சுந்தரி அம்மன் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதையடுத்து இரவு 7.30 மணிக்கு மேல் ஸ்ரீ சுப்பிரமணியரை வழிபடச் சென்ற பக்தர்களுக்கு ஸ்ரீ சுந்தரி அம்மன் கோயில் பூசாரி பாஸ்கர் என்பவர் சாமி சன்னதியை பூட்டிய பூட்டை நான் திறந்து ஸ்ரீசுப்பிரமணியருக்கு தீபாராதனை காண்பிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்ததோடு சுந்தரி அம்மனை விட்டு அகல மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அவர் சொல்லி ஒரு ஐந்து நிமிடங்களுக்குள் யாரோ ஒருவர் அந்த கோயிலில் தரிசனத்திற்கு வருகை தந்தார். அவருக்கு வெள்ளி கவசம் பூட்டப்பட்ட விநாயகரை பூட்டை திறந்து காண்பித்து தரிசனம் செய்ய வைத்து, அடுத்து ஸ்ரீசுப்பிரமணியரிடம் அழைத்து வந்து அந்த ஸ்ரீசுப்பிரமணியருக்கு பூட்டு போடப்பட்டிருந்த பூட்டையும் திறந்து அதன் கதவுகளைத் திறந்து தீபாராதனை காண்பித்தார்.
இப்படி பாஸ்கருக்கு யார் இப்படி தான் தோன்றித்தனமாக செயல்படுவதற்கு வழிகாட்டினர் என்பது தெரியவில்லை. பணம் இருப்பவர்களுக்கு ஒரு தரிசனம், பக்தர்களுக்கு ஒரு தரிசனம் என பிரிவினை செய்கிறார்.
அதாவது ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைத்து பார்ப்பதற்கு இவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்பது தெரியவில்லை. இதை கோயில் நிர்வாகம் உரிய முறையில் விசாரித்து அவர் செய்தது முறையா? தவறா? இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை அவர் உணர்ந்து கொள்ளும்படி யார் கேட்டாலும் அவர்களுக்கு தரிசனம் செய்வதற்கு அனுமதி கொடுக்க மறுப்பதற்கு இவர் யார்? என்பதை அவர் புரிந்து கொள்ளும் அளவில் விளக்கம் தர வேண்டும்.
குறிப்பாக பாஸ்கர் இனிவரும் காலங்களில் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்பது பக்தர்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது.
பல பக்தர்களை ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பிய பூசாரி பாஸ்கர் மீது அறங்காவலர் குழுவோ அல்லது கோயில் நிர்வாகமோ உரிய முறையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்களின் ஒட்டுமொத்த எதிர்மபார்ப்பாக மாறியுள்ளது.
சில பக்தர்கள் திடீர் போர்க்கொடியும் தாக்கியுள்ளனர். பூசாரி பாஸ்கர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் பொறுத்திருதான் பார்க்க வேண்டும்.
