BREAKING NEWS

விண்ணம்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம்!

விண்ணம்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம்!

வேலூர் மாவட்டம் மாவட்டம், காட்பாடி வட்டம், விண்ணம்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது.

விண்ணம்பள்ளியில் உள்ள தர்மராஜா கோயில் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் முகாம் வெகு விமரிசையாக நடந்தது. இந்த முகாமில் அரசு சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள், மருத்துவ துறை, நில அளவை துறை, வருவாய்த்துறை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான தேவைகளுக்காக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

இதில் தொடர்புடைய அரசு அலுவலர்கள் அந்த இடத்திலேயே பொதுமக்கள் கேட்கும் பணிகளை செய்து முடித்து கொடுத்தனர். இந்த தர்மராஜா கோயில் திடல் திருவிழா போல் காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் முகாமுக்கு விண்ணம்பள்ளியின் ஊராட்சி மன்ற தலைவி மஹாலக்ஷ்மி முரளி தலைமை வகித்தார்.

தர்மராஜா கோயில் தர்மகர்த்தா முரளி நாயுடு முன்னிலை வகித்தார். விண்ணம்பள்ளி ஊராட்சி செயலர் பஞ்சாட்சரம் அனைவரையும் வரவேற்றார்.

இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் திலீப் குமார், கோபி, ஜோதீஸ்வரன், நில அளவையர் பிரசன்னா மற்றும் பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிற்பகல் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆட்டிறைச்சி பிரியாணி பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விண்ணம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவி மஹாலக்ஷ்மி முரளி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த முகாமில் அரசு வாயிலாக ஏதாவது நலத்திட்ட உதவிகள் மற்றும் ரொக்க பணங்கள் ஏதாவது பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்று கிராம பொதுமக்கள் அரசு அதிகாரிகளை அணுகி கேட்டது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS