விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் கேட்டு அடம் பிடிக்கும் எஸ்.ஐ., தம்பதி!
வேலூர் மாவட்டத்தில் விரிஞ்சிபுரம் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி கனிம வளம் கடத்துதல் (மண்,மணல்) மற்றும் காட்டன், லாட்டரி, விபச்சாரம் என்று சமூக விரோத செயல்கள் படுஜோராக இங்கு நடந்து வருகின்றன. இதனால் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கணிசமான ஒரு தொகை மாமூலாக கிடைத்து வருகிறது. இதனால் இந்த காவல் நிலையத்தில் பணிபுரிய மிகவும் போட்டா போட்டி கடுமையாக நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு தலா ரூ. 50 லட்சம் இந்த பகுதியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள மற்றவர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் வரை கிடைப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த காவல் நிலையத்தில் பணியாற்றுவதற்கு கடுமையான போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த காவல் நிலையத்தையே குறிவைத்து நாமும் இந்த காவல் நிலையத்தில் பணியை பெற்றுக் கொண்டால் பல லட்சங்களை வாரி குவிக்கலாம் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் சிறப்பு படையில் இருந்த உதவி ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகிய இருவரும் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தங்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணனை வலம் வந்து கொண்டுள்ளனர் என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பசையுள்ள காவல் நிலையத்தை தேர்வு செய்து எப்படியாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்து விட்டு விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து விடலாம் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஜெகதீசன் பத்மா தம்பதியர் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இதை புரிந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விரிஞ்சிபுரத்தில் காட்டன், லாட்டரி மணல், ரேஷன் அரிசி என சகலமும் இருக்கிறது. இங்கு எஸ்.ஐ. ,பணிக்கு வருவதற்காக மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பெண் எஸ்.ஐ-யின் கணவரும், எஸ்.ஐ, என்பதால் பேரம் பேசி வருகிறாராம். பசையான ஏரியா என்பதால் வெயிட்டாக கவனிக்கவும் தம்பதி எஸ்ஐக்கள் தயாராக இருக்கிறார்களாம்.