விளநகர் ஸ்ரீ மேல மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் விளநகர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மேல மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது .
பின்னர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை அம்மனுக்கு செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.