BREAKING NEWS

விளையாட்டு செய்திகள்

மந்திர சுழற்பந்து வீச்சால் நம்மை மயக்கிய ஷேன் வார்ன் எனும் கிரிக்கெட் மேதை.கமல் உருக்கம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. 52 வய தான ஷேன் வார்னே நேற்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஷேன் வார்ன்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது பவுலிங் மேஜிக்கால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர். ஷேன் வார்ன் ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். ஐபிஎல் தொடரின் முதல் வெற்றி கோப்பையை தட்டி சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்ன் தான் கேப்டனாக இருந்தார். இந்நிலையில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

அவரது திடீர் மரணம் உலக கிரிக்கெட் வீரர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் ஷேன் வார்னேவின் திடீர் மறைவால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஷேன் வார்னே மறைவுக்கு சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கமல் ஹாசன் ஷேன் வார்னே மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில், மந்திர சுழற்பந்து வீச்சால் நம்மை மயக்கிய ஷேன் வார்ன் எனும் கிரிக்கெட் மேதையை இழந்துவிட்டோம். அவர் நமக்களித்த தருணங்கள் நினைவில் சுழல்கின்றன.. என குறிப்பிட்டுள்ளார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )