BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

15-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று தொடங்கவுள்ளது.

 

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து இந்த சீசனில் களமிறங்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. நடப்பு 2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் பங்கேற்க 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1,214 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதில் இருந்து 590 வீரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதிப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 220 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், 30 லட்சம், 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர் உள்ளது. மேலும் ஒரு அணி 25 வீரர்களை தேர்வு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஏழு வெளிநாட்டு வீரர்களை சேர்த்துக்கொள்ள வழிவகையும் செய்யப்பட்டு உள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )