BREAKING NEWS

விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு

விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த  கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு

68 உயிர்களை காவு வாங்கிய விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அப்பகுதி மக்களை போதையின் பாதையில் இருந்து மீட்டெடுக்க தனலட்சுமி சமூக நல தொண்டு அறக்கட்டளை, கலாம் நர்சிங் கல்லூரி, கள்ளக்குறிச்சி காவல்துறை இணைந்து கள்ளக்குறிச்சி கருணாபுரம் டேனிஷ் மிஷன் பள்ளியின் எதிரில் உள்ள வளாகத்தில் போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக உள்ளக குழு உறுப்பினரும், தனலட்சுமி சமூக நல தொண்டு அறக்கட்டளை நிறுவனருமான டாக்டர். தனலட்சுமி தலைமை தாங்கினார். கலாம் சமுதாய கல்லூரி தாளாளர் முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி காவல் சரக ஆய்வாளர் ராபின்சன் கலந்துகொண்டு விஷ சாராயம், கஞ்சா, மது போன்ற போதை பொருட்களின் தீமைகளை குறித்தும் அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அப்பகுதி சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், மற்றும் கலாம் சமுதாய கல்லூரி (நர்சிங்) மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கருணாபுரத்தின் அனைத்து வீதிகளின் வழியாக போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிர்ப்பான வாசகங்களை கோஷமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு

Share this…

CATEGORIES
TAGS