BREAKING NEWS

வெகு விமர்சையாக நடைபெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயி தெப்பத் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு

வெகு விமர்சையாக நடைபெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயி தெப்பத் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், திருவீதியுலாவும் நடைபெற்றன. திருவிழாவின் நிறைவு நாளையொட்டி திங்கள்கிழமை இரவு தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் மண்டபத்தில் யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலில் இருந்து புறப்பட்டு பிரதான சாலையில் உள்ள அடைக்கலம் காத்தான் மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பக் குளத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அன்னதானம் நடைபெற்றது.
விழாவில் நகர்மன்ற தலைவர் கா. கருணாநிதி,அறங்காவலர் குழுத் தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள், கோயில் செயல் அலுவலர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

.

CATEGORIES
TAGS