BREAKING NEWS

வேலூரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேட்டி

வேலூரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேட்டி

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் புதிய நீதிக்கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம் தனது தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதியிலும் விளையாட்டு மைதானம் அமைக்கபடும் எம்பி அலுவலகம் திறக்கபடும் ஆண்டுக்கு ஒருமுறை அதிகாரிகளுடன் சென்று மக்கள் குறையை கேட்பேன் மருத்துவ முகாம்களை நடத்துவேன் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவேன்.

அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யபடும் சட்டமன்ற தொகுதிகளில் ஏழை திருமணம் செய்ய தனிப்பட்ட முறையில் 10 ஆயிரம் வழங்கபடும் பெண்களுக்கு இலவச பிரசவம் ஏ.சி.எஸ் மருத்துவமனையில் பார்க்கபடும் பல இடங்களில் சுகாதார மையங்கள் ஏற்படுத்துவேன் பொங்கல் பண்டிகை ரம்ஜான் கிறிஸ்மசுக்கு அந்தந்த மதம் சார்ந்த மக்களுக்கும் பரிசுகள் வழங்கபடும் கூட்டுகுடிநீர் திட்டம் விரிவுபடுத்துவோம் கோதாவரி பாலாறு இணைப்பை மத்திய அரசு அறிவிக்கவுள்ளது பாலாறு காவிரியை இணைப்போம் குடிநீர் பிரச்சணையை போக்குவோம் பாலாற்றில் தடுப்பணைகள் மத்திய மாநில அரசு திட்டம் மூலம் கட்டுவோம் காவேரிப்பாக்கம் ஏரி தடுப்பணையால் நிரம்பியுள்ளது.

அதை போல் பாலாற்றில் தடுப்பணை கட்டுவோம் ஒக்கேனக்கல் குடிநீர் திட்டம் விரிவுப்படுத்தபட்டும் வேலூர் மையபகுதியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கபடும் வேலூரில் எய்ம்ஸ் கொண்டு வர முயற்சி செய்வோம் மத்திய அரசின் அனைத்து திட்டங்கள் செய்வோம் ஏழை எளிய மக்கள் குடிசை இல்லா பாராளுமன்ற தொகுதியாக மாற்றி கான் கிரீட் வீடுகளாக மாற்றுவோம் ருத்ரா கடன் திட்டம் கொண்டு வருவோம் .

மூத்த குடிமக்கள் காப்பீட்டு தொகை அதிகரிக்க வழி செய்வோம் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம் ஜெருசேலேம் செல்லவும் மெக்கா மதினா காசி ராமேஸ்வரம் செல்லும் வகையில் சிறப்பு ரயில்கள் விடப்படும் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரயிலை விடுவோம் சபரி மலை செல்ல சிறப்பு ரயில் விடுவோம் விவசாயிகளுக்கு பிரதமர்6 ஆயிரம் வழங்குவதை 12 ஆயிரமாக பெற்றுதருவோம் .

வேலூர் ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் மேம்பாலம் கட்டுவோம் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவாக்கம் செய்வோம் வேலூருக்கு மெட் ரோ ரயில் கொண்டு வரும் முயற்சியை செய்வோம் வேலூர் கோட்டையை அழகுப்படுத்தி விளையாட்டு திடல்கள் பயிற்சி மையங்களை கோட்டையின் உள்ளே அமைப்போம் பொதுசுத்திகரிப்பு மையம் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் செய்ய நடவடிக்கை எடுக்கபடும் பல தோல் தொழிற்சாலைகள் மூடபடுவதால் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் ஆகவே பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்துவோம் என கூறினார் பேட்டியின் போது பாஜக மாவட்ட செயலாளர் ஜெகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

 

Share this…

CATEGORIES
TAGS