BREAKING NEWS

வேலூரை மோசமான மாநகரமாக்கிய மாநகராட்சி நிர்வாகம்: அதிமுக மாவட்ட செயலாளர் மாநகராட்சி ஆணையரிடம் மனு!

வேலூரை மோசமான மாநகரமாக்கிய மாநகராட்சி நிர்வாகம்: அதிமுக மாவட்ட செயலாளர் மாநகராட்சி ஆணையரிடம் மனு!

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தாமதம் மழைநீர் வடிகால் சீர்கேடு – பொதுமக்கள் அவதி – சுகாதார சீர்கேடு -போர்க்கால அடிப்படையில் சரி செய்யக் கோரி அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு (எ) ராதாகிருஷ்ணன் வேலூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார்.

வேலூர் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மாநகராட்சி முழுவதும் கால்வாய்கள் பள்ளங்கள் தோண்டப்பட்டு அதில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டுமென வேலூர் மாவட்ட செயலாளர் அப்பு மாநகராட்சி ஆணையர் லஷ்மணனிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், சாலைப்பணிகள், கால்வாய்பணிகள், பாதாள சாக்கடைப்பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பிக்கபட்டு, பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது.

சாலைகள் குண்டும் குழியுமாக சேதம் அடைந்து பொதுமக்கள் போக்குவரத்து பயன்பாடுக்கு சிரமம் ஏற்படுகிறாது, இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

மேலும் மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் பணிகள், சரிவர செயல்படுத்தாததால் மாநகராட்சி பகுதிகளான கஸ்பா, சைதாப்பேட்டை. கன்சால்பேட்டை, கொணவட்டம். முள்ளிப்பாளையம், வசந்தபுரம். கழிஞ்சூர், மதிநகர் காங்கேயநல்லூர். சேண்பாக்கம் பகுதிகளில் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

அதே போல் வி.ஜி.ராவ் நகர், பாரதி நகர், விருதம்பட்டு, கொசப்பேட்டை, தொரப்பாடி கே.கே நகர் பகுதி, கஸ்பா சதுப்பேரி சாலை,தோட்டப்பாளையம். சர்கார் மண்டி தெரு. பாஸ்கல் நாயுடு தெரு,சாய்நாதபுரம், பலவன்சாத்து.

விருப்பாட்சிபுரம், பகுதிகளில் வேலூரில் பெய்த இரண்டு நாள் மழைக்கே சாலைகளில் மழைநீர் தேங்குவதோடு, மழைநீரோடு கழிவுநீர் கலந்து சாலைகளிலும், வீடுகளிலும் புகுந்துவிட்டது.

துர்நாற்றம் அடித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது,பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும், மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் அடிக்கும் நீரில் நீந்திச் செல்லும் அவலநிலை உள்ளது.

மேலும் லாங்கு பஜார், நேதாஜி காய்கறி மார்கெட் பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகஉள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் சிரமப்படுகிறார்கள். இதனால் இந்த பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் வேலூர் மக்கள், பல லட்சம் பேர் குடிநீராக பயன்படுத்தும் சார்பனாமேடு குடிநீர் தொட்டி அருகில் சுகாதார சீர்கேடாக உள்ளது. குடிநீர் தொட்டி பாதுகாப்பற்ற நிலையில், சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.

தொற்றுநோய் அபாயத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரித்துள்ளார்.

CATEGORIES
TAGS