BREAKING NEWS

வேலூர் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து என அவதூறாக பேசுகிறார்

வேலூர் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து என அவதூறாக பேசுகிறார்

 

வேலூர் திமுக வேட்பாளர் பெண்களைப் பார்த்து பளபளனு இரூக்க பவுடர் போட்டியா? ஃபேர்ன்ல உள்ள போட்டியா? என அவதூறாக பேசுகிறார் அது என்ன உன் வீட்டு பணமா? பெண்களை இழிவு படுத்தி பேசுவது திமுகவின் குணம்

ஆந்திரா அரசு 300 கோடியில் பாலாற்றில் அணை கட்டுவதை தடுக்க வக்கில்லாத அரசு திமுக அரசு. வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கார் இருசக்கர வாகனம் போர்வெல் மீது தார் சாலை அமைத்தது தான் இந்த ஆட்சியின் லட்சணம்

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஜியோ போட்டது நான். அது இணையதளத்திலேயே உள்ளது. ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டும் என்ற கட்சியோடு பாமக இன்று கூட்டணி வைத்துள்ளது

வேலூர் மலைப் பகுதிகளில் கள்ளச்சாராயம் அதிகரித்துள்ளது சமூக விரோதிகள் அதிகரித்துள்ளார்கள் அதிமுகவால் அடையாளம் காணப்பட்டு நன்றி மறந்தவர் இன்று எதிர் கூட்டணியில் போட்டியிடுகிறார்கள்

செருப்பு, பருப்பு என வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேசி வருகிறார். உதார் உதயநிதி

மத்தியில் உள்ளவர்களிடம் கூட்டு வைத்தால் அவர்கள் கொண்டுவரும் தமிழகத்திற்கு விரோதமான சட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால்தான் நாம் தனித்துப் போட்டியிடுகிறோம்

தற்போது அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக நடத்திய கூட்டத்தில் மு க ஸ்டாலின் புகார் பெட்டியை வைத்து மனுக்களை வாங்கி சென்றார் ஆனால் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சாவியை தொலைத்துவிட்டார் போல எனக் கூறி அது தொடர்பான புகைப்பட ஆதாரத்தை காட்டிய எடப்பாடி பழனிச்சாமி

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து கந்தனேரியில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில்,

அதிமுக – வால் அடையாளம் காணப்பட்டவர் நம்மை எதிர்த்து இங்கு போட்டியிடுகிறார். இன்று நம்மை துரோகி என்றும் முதுகில் குத்தியதாகவும் பேசுகிறார். என்றைக்கும் அதிமுக துரோகம் செய்தது கிடையாது. ஆகவே நன்றி மறக்க வேண்டாம். 2019 ல் நம்மோடு கூட்டணி வைத்ததால் நமது கழகத்தினர் கடுமையாக உழைத்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. நல்ல எண்ணம் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். எண்ணம் சராயில்லை அதனால் தோல்வியடைந்தீர்கள் என தற்போது பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதியநீதிக்கட்சி தலைவர் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

நிச்சயம் வேலூரில் அதிமுக வெற்றி பெறும். வேலூரில் மும்முனை போட்டி நடக்கிறது அதில் முன்னனியில் இருப்பவர் நமது வேட்பாளர்.

திமுகவை சேர்ந்த வேலூர் வேட்பாளர் பெண்களை பார்த்து அவதுராக பேசுகிறார். பவுடர் போட்டியா? பேரன் லவ்லி போட்டியா பளபளனு இருக்கே என பேசுகிறார் அது என்ன உன் வீட்டு பணமா?
இன்னொரு அமைச்சர் ஓசி பஸ் என பேசுகிறார்.

பெண்களை இழிவுபடுத்தி பேசுவது திமுக. பெண்களை தெய்வமாக மதிப்பது அதிமுக.

இந்த தேரதலில் பெண்கள் சரியான ஆப்பு கொடுக்க போராங்க

பெண்களுக்கான மகளிர் உதவித் தொகையை அனைவருக்கும் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு தற்போது 75 லட்சம் பேருக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். ஆனால் வெளியில் ஒரு கோடி பேருக்கு மேல் கொடுக்கிறோம் என பொய் சொல்கிறார்கள்.

ஸ்டாலின் எப்பவுமே டீ குடித்ததே கிடையாது போல தேர்தல் வாக்கிக் போகும் போது தான் டீ கடையே பாக்குறார்

அப்போது பெண் மணி ஒருவர் எனக்கு ஆயிரம் வரலை என கேட்டதுதத்து. தகுதி இல்லை என்றார்.

இன்று கேள்வி கேட்ட தொடங்கிவிட்டார்கள்.
மக்கள் இன்றைக்கு விழித்துக்கொண்டார்கள் ஸ்டாலின் அவர்களே.

இன்றைக்கு உதார் உதயநிதி வாய்க்கு வந்தமாதிரி எல்லாம் கீழ்தரமாக, அவதுராக பேசுகிறார். இன்றைக்கு போதை பொருள் கூடாரமாக திமுக உள்ளது. இன்று கஞ்சா போதை பொருள் நிறைந்த மாநிலமாக உள்ளது.

“மக்கள் வெறுக்கின்ற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது”

பள்ளி கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்லதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

மடிக்கணிணி திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தியது திமுக அரசு. அன்று மாணவர் மடியில் மடிக்கணிணி விளையாடியது, இன்றைக்கு திமுக ஆட்சியில் போதை பொருள் புழக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

வேலூர் மலை பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் கொடுக்கும் ஒரே அரசு திமுக தான். சமூகவிரோதிகள் அதிகமாகியுள்ளனர்.

நீட் ரகசியம் என பேசுகிறார் உதயநிதி, என்னப்பா ரகசியம் சொல்லுப்பா கொஞ்ச.
நீட்டை கொண்டுவந்தது காங்கிரஸ் கூட்டணி இன்றைக்கு மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
கொண்டு வந்தவர்களே போராடும் கட்சி திமுக –

அதிமுக கொண்டு வந்த
7.5% இட ஒதுக்கீட்டால் 2170 பேர் மருத்துவம் படிக்கிறார்கள்.
தாலிக்கு தங்கம் கொடுத்தோம் நாம். அது உங்களை என்னப்பா பண்ணது அதையும் தடை பண்ணிட்டிங்க.
எங்கு பார்த்தலும் கொலை கொள்ளை கற்பழிப்பு நடக்கும் அலங்கோல ஆட்சி நடக்கிறது.

300 கோடியில் ஆந்திரா அரசு பாலாற்றில் கட்டும் தடுப்பணையை தடுக்க வக்கில்லாத அரசு திமுக அரசு. இனியாவது கும்பகரனன் தூக்கத்தில் இருந்து எழுந்துக்கோங்க. பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டினால் வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் வறட்சி மாவட்டமாக மாறும்.

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் கேட்டு கேட்டே முடக்கிவிட்டார்கள். வேலூரில் தார்சாலை, சிமெண்ட் சாலையை கார் மேலேயும், பைக் மேலேயும், போர்வெல் மீதும் போடுவார்கள் இதுதான் இந்த ஆட்சியின் லட்சனம்.

தமிழகத்திற்க்கு புயல், வெள்ள பாதித்தால் சிறப்பு நிதி கொடுப்பது இல்லை. ஆனால் வடமாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி கொடுக்கிறார்கள்.
மாற்றான்தாய் பிள்ளை மனப்பான்மையோடு பார்க்கிறார்கள். இதனால் தான் தேசிய கட்சிகளோடு நாம் கூட்டணி வைக்கவில்லை. மத்தியில் கூட்டணி வைத்தால் அவர்கள் கொண்டு வரும் திட்டத்தை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
அதனால் தான் தனித்து நின்று வென்று தமிழக நலன்களை மீட்டெடுக்க உள்ளோம்.

நாங்க பயந்து இருந்தா கூட்டணியில் இருந்திருப்போம். நாங்க பயப்படவில்லை அதனால தா வெளியே வந்தோம். நீங்கள் தான் இரட்டை வேடம் போட்டு மத்திய அரசிடம் சரணாகதி அடைந்திருக்கிங்க.
நம்மை பார்த்து கள்ளக்கூட்டணி என பேசுகிறார். அது உங்க பரம்பரை புத்தி.
நாங்க விலகினால் நீங்க ஏம்பா பதற்றமடையுறிங்க.

ஸ்டாலின் பெட்டி புகைப்படத்தை காட்டிய எடப்பாடி

இதே இடத்தில் எதிர்க்காட்சியாக இருந்த போது ஸ்டாலின் பொது கூட்டம் போட்டு புகார் பெட்டி வைத்து மனுவை வாங்கி பெட்டியை பூட்டி எடுத்துனு போனார். ஸ்டாலின் சாவியை தொலைத்துவிட்டார் போல அல்லது பெட்டியை தொலைத்துவிட்டார் போல ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைத்துவிட்டார்கள்.

சதுரங்க வேட்டை படம் போல் ஆசையை தூண்டி ஏமாற்றி வருகிறார்கள்.

போதை பொருள் ஜாபர் சாதிக் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியுடன் உள்ள போட்டோவை காட்டினார்.
செருப்பு, பருப்பு என என்ன பேசுவது என தெரியாமல் பேசுகிறார் உதயநிதி.

வேலூர் ஸ்மார்ட் சிட்டிக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது,

வேலூர் புதிய பேருந்து நிலையம் கட்டியது,

வேலூர் பல்நோக்கு மருத்துவமனைக்கு 190 கோடி,

கே.வி.குப்பம், பேர்ணாம்பட் என புதிய தாலுக்காக உறுவாக்கியது.

வடுங்கன்தாங்கள் மேம்பாலம் கட்டியது.

பீஞ்சமந்தை மருத்துவமனை கட்டியது.

அணைக்கட்டு கலை கல்லூரி கொண்டு வந்தது.

ஆயிரம் கோடியில் காவேரி கூட்டு குடிநீர் கொண்டுவந்தது

16 கோடி காட்பாடி விளையாட்டு மைதானம்
கொண்டு வந்தது அதிமுக
அவற்றை இன்று ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.

ஆனால் நீங்க 3 1/2 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளீர்கள்.

விடியா திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டது தான் மிச்சம் .

நம்மை எதிர்த்து நிற்ப்பவர்கள் செல்வம் படைத்தவர்கள், கோட்டீஸ்வரர்கள் பலம் பொறுந்தியவர்கள். நமது வேட்பாளர் எளியவர், விவசாய குடும்பத்தை சேர்ந்த மருத்துவர் அவரை வெற்றியடைய செய்ய வேண்டும்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த G O போட்டது நான். அதை மறந்து பச்சோந்தி போல் பேசுகிறார்கள் எதிர்க் கட்சி கூட்டணியில் இருப்பவர். நாம் போட்ட GO குறித்து ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறாகள். பச்சோந்தி போல் கூட்டணி மாறி வருகிறார்கள் என பாமகவை தாக்கி பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

CATEGORIES
TAGS