BREAKING NEWS

ஸ்ரீ ஆதிசங்கரர் பேரவையின் சார்பில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.

ஸ்ரீ ஆதிசங்கரர் பேரவையின் சார்பில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட ராஜகோபாலபுரம் 12-வது வார்டில் உள்ள பாலாஜி நகரில் ஸ்ரீ ஆதிசங்கரர் பேரவையின் சார்பில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது இப்போட்டிக்கு ஆதிசங்கரர் பேரவையின் தலைவரும் பேரூராட்சி வார்டு உறுப்பினருமான தம்பி ஞானசம்பந்தம் தலைமை வகித்தார்.

 

ஆச்சிமன்ற குழு உறுப்பினர் ராமநாதன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் கோவிந்தராஜன், அமைப்பாளர் மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாபெரும் கோலப்போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த பெண்கள் சிறப்பாக வரையப்பட்டிருந்த 101 கோலங்களையும் பார்வையிட்டனர்.

 

அதனைத் தொடர்ந்து வரையப்பட்டிருந்த கோலங்களில் 5-நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயமும்.

 

இரண்டாம் பரிசாக வெள்ளி காமாட்சி விளக்கும்.மூன்றாம் பரிசாக வெள்ளி குங்குமச்சிமிழ் மற்றும் சான்றிதழ்களும் 98 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகளையும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் வழங்கினார் இதில் மயிலாடுதுறை நகர தலைவர் ராமானுஜம்.

மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர்கள் ஜம்பு கென்னடி, ரியாத் அஹமது, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS