அடிப்படை தேவைகளுக்காக நடத்த பட்ட நாண்கு ஆண்டு கால போராட்டம், மனம் இறங்கி வந்த கோவை மாவட்ட ஆட்சியர். நெகிழ்ந்து நன்றி கூறிய ஊர்மக்கள்.
கோவை மாவட்டம் காரமடை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு சமூக நலத்துறை சார்பாக வழங்க பட்ட இடத்தில் வீடுகள் கட்டி வசிக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்த பகுதியில் கடந்த நாண்கு ஆண்டுகளாக குடிநீர் வசதிகள் இல்லை, மின் விளக்கு இல்லை, சாலை வசதிகள் இல்லை, சாக்கடை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை, எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தனி தீவுகளில் வசிப்பது போல வசித்து வந்த மக்கள், பல முறை இது சம்பந்தமாக, கோவை மாவட்ட ஆட்சியரிடம், துறை சார்ந்த அதிகாரிகளிடமும் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் வந்தனர், நாண்கு ஆண்டுகளாக இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அதிகாரிகளால், கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இதனை தொடர்ந்து இவர்களின் வாழ்க்கை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்க்கு செய்திகள் மூலமாக வந்தது. செய்திகள் மாவட்ட ஆட்சியரிடன் கவனத்திற்கு சென்றது. மனம் இறங்கி வந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இவர்களது பகுதியில் போர் போடபட்டு தண்ணீர் வசதிகள் செய்து தரப்பட்டு இங்குள்ள ஐந்து வீதிகளுக்கும் பொது தண்ணீர் குழாய் பதிக்க பட்டது. இரண்டு தினங்களுக்கு ஒரு முறை தண்ணீரும் திறந்து விடபடுகினற்து.
பொதுமக்கள குடங்களை கொண்டு தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு தெருவிளக்குகளும் போடபட்டுள்ளது. 4 தெருவிளக்குகளும் போடபட்டுள்ளது. வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்களது கோரிக்கைக்கு செவி சாய்த்து இவற்றை செய்து தந்த கோவை மாவட்ட ஆட்சியர், மற்றும் காரமடை நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், நகர செயலாளர் வெங்கடேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்தர், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோகர், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜெயசீலன் ஆகியோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
மேலும் இந்த பகுதியில் சாலை, வசதி மற்றும் சாக்கடை வசதிகள் செய்து தரவேண்டும் மற்றும் பொது கழிப்பிடம் கட்டி தர வேண்டும், இந்த பகுதியில் இருந்து வெளியே செல்ல பேருந்து வசதிகள் இல்லை ஒரு பேருந்து வருகின்றது அந்த பேருந்தும் இப்பகுதியில் நிற்பது இல்லை எனவே இந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் கட்டி தந்து பேருந்துகளை நிறுத்த வேண்டும்.
இந்த பகுதிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் கேட்டு கொண்டுள்ளனர் இந்த நிகழ்வில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அண்ணபூர்னி, புஷ்பலதா, சுமித்ரா, இந்திராணி, ரகுநாதன், மற்றும் ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.