அதிமுக சார்பில் எடப்பாடியார் ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் மூலம் வாக்கு சேகரித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர அதிமுக சார்பில் காந்தி சிலை , போஸ்ட் ஆபீஸ் தெரு, சன்னதி தெரு ,பஜார் தெரு, உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட தெருக்களில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி சம்பத், நகரச் செயலாளர் வாசு, நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன், நகர துணைச் செயலாளர் ரமா கோபி ஆகியோர் 40 ஆண்டுகளில் நிறைவேற்ற முடியாத வளர்ச்சி பணிகளை நான்கரை ஆண்டுகளில் எடப்பாடியார் ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் மூலம் பொது மக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தனர். இதில் நகர நிர்வாகிகள் ,உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள் பலர் உடன் இருந்தனர்.
CATEGORIES ராணிப்பேட்டை
TAGS ராணிப்பேட்டை