BREAKING NEWS

அதிமுக சார்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு – இரு தரப்பினர் இடயே வாக்குவாதம்.

அதிமுக சார்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட  பேனர் கிழிப்பு – இரு தரப்பினர் இடயே வாக்குவாதம்.

கடலூர் திருப்பாதிரிப்புலிகளில் அதிமுக சார்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு – இரு தரப்பினர் இடயே வாக்குவாதம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி கடலூர் திருப்பாதிரிபுலியூர் அதிமுக பகுதி கழகம் சார்பில் இன்று மாலை தேரடி தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைகைச் செல்வன், எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

இதற்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அதிமுக பகுதி கழக நிர்வாகிகள் பொதுக் கூட்டத்திற்கான மேடை மற்றும் வரவேற்பு பதாகைகள் அமைத்திருந்தனர். அதில் அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சி.கே.எஸ்.கார்த்திகேயன் என்பவர் அமைத்திருந்த பதாகையில் பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் அவரின் கணவர் பன்னீர்செல்வம் அவர்களின் உருவப்படம் இடம்பெற்றிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அவைத் தலைவர் ஜி.ஜே.குமார் ஆதரவாளர்கள் பதாகையில் இருந்த முன்னாள் எம்எல்ஏ சத்யா, பன்னீர்செல்வம் அவர்களின் உருவப் படத்தை கிழித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளரின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து அறிந்த திருப்பாதிரிபுலியூர் காவல் தறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Share this…

CATEGORIES
TAGS