அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா, கிழக்கு ஒன்றியம் சார்பில் கொண்டாட்டம்.சங்ககிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி சங்ககிரி கிழக்கு ஒன்றியம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளையொட்டி சங்ககிரி கிழக்கு ஒன்றியம் சார்பில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாஜலம் உத்தரவின் பேரில், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் என் சி ஆர் ரத்தினம் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் இனிப்பு மற்றும் நீர்மோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் வேலுமணி, உட்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
CATEGORIES சேலம்