அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு..

அதிமுகபொன்விழா எழுச்சி மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் பாபநாசத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முன்னதாக அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரச்சார வாகனத்தை அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் தஞ்சை மாவட்ட பொறுப்பாளருமான இரா. காமராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் தஞ்சை மாவட்ட பொறுப்பாளருமான இரா. காமராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசும்போது எழுச்சி மாநாட்டில் திரளாக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 20க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராம்குமார். இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் துரை சண்முகபிரபு, ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, கோபிநாதன். ஓஏ.ராமச்சந்திரன். சூரியநாராயணன். நகர கழக செயலாளர்கள் சின்னையன். சின்னதுரை உள்பட நிர்வாகிகள்.தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எஸ். மனோகரன் பாபநாசம்.