BREAKING NEWS

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஈரோடு திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மூன்று தலைமுறைகளை கடந்து 65 ஆண்டு கால எதிர்பார்ப்பான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி வரப் பாளையம் ஐந்தாவது நீரேற்று நிலையத்தை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே சுப்பிராயன் மற்றும் ஒன்றிய திமுக செயலாளர் நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில் குமார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ் வி சரவணன் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் சிவராஜ் திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் கே கே செல்வம் ஆகியோர் நீரற்ற நிலையத்திற்கு வருகைத்தந்து தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஈரோட, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கு மேலான கனவாக இருந்து வந்தது இத்திட்டத்தின் ரூபாய் 1916 கோடி செலவில் பணிகள் நிறைவேற்று துவக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1045 குளம் குட்டைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் கீழே பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் கிடைக்கும் திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகின்றனர்.

மூன்று தலைமுறைகளின் கனவு திட்டம் நினைவானது.
நிகழ்ச்சியில் அவிநாசி அத்திக்கடவு திட்ட ஐந்தாவது நீர் ஏற்ற நிலையத்திற்கு சுமார் 2 ஏக்கர் நிலத்தை வழங்கிய விவசாயிகளுக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

CATEGORIES
TAGS