BREAKING NEWS

அந்தியூர் அருகே யானை தாக்கியதில் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் காயம்.

அந்தியூர் அருகே யானை தாக்கியதில் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் காயம்.

 

அந்தியூர் செய்தியாளர்

பா.ஜெயக்குமார்.

 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள தட்டகரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரிய மலை சுற்று வனப் பகுதிக்குள் உள்ள தண்ணீர் குட்டை பகுதியில் சுரேஷ் (30) கணேசன்( 27) ஆகிய இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் இன்று வழக்கமான ரோந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

 

அப்பொழுது அப்பகுதியில் புதர் மறைவில் நின்று இருந்த ஒற்றை ஆண் யானை சுரேஷ் மற்றும் கணேசனை தாக்கியது இதில் கணேசன் படுகாயம் அடைந்தார் சுரேஷ் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினார் பின்னர் இது குறித்து சுரேஷ் தட்டகரை வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

 

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )