அனுமந்தன்பட்டி அருகே உள்ள கோவிந்தன் பட்டியில் கோவில் திருவிழாவில் மைக் செட்டில் பாடல் இசைக்கப்பட்டதை தடுத்து நிறுத்திய காவல்துறை
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி அருகே உள்ள கோவிந்தன் பட்டியில் கோவில் திருவிழாவில் அதிகாலையில் மைக் செட்டில் பாடல் இசைக்கப்பட்டதை தடுத்து நிறுத்திய காவல்துறையைச் சார்ந்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி அருகே உள்ள கோவிந்தன்பட்டியில் அருள்மிகு பட்டாளம்மன் திருக்கோவில் உற்சவ திருவிழா கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது.ஒரு சமுதாயத்தினர் இத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடி வருகின்றனர்.
இதற்காக மைக் செட் அமைக்கப்பட்டு பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் கரகம் எடுத்து நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து.இன்று அதிகாலையில் திருவிழாவில் ஓர் நிகழ்வாக பெண்கள் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இதற்காக பெண்களை ஒன்றிணைப்பதற்காக இன்று அதிகாலையில் நான்கு மணி அளவில் மைக் செட் மூலம் அழைப்பு விடுப்பதற்கு முன்பாக பாடல் ஒன்று ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையைச் சார்ந்த அதிகாரி ஒருவர் மைக் செட் போடும் கோவிலுக்கு சென்று அதிகாலையில் மைக் செட் இயக்கக் கூடாது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மைக் செட் இயக்கக் கூடாது என்று கூறியதாகவும் அப்போது மைக் செட் போடுபவருக்கும் காவல்துறை அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காவல்துறை அதிகாரி மைக் செட் போடுபவரை தாக்கி மைக் செட் பொருட்களையும் உடைத்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து தகவல் அறிந்த அந்த சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் ஒன்றிணைந்து திடீரென திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன் பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக மைக் செட் போடுபவரை தாக்கி, எங்கள் சமூக மக்களை தரக்குறைவாக பேசிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.