அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் நடைபெற்று வரும் மனித உரிமை மீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஓடியன் மணி திரையரங்கம் அருகே அனைத்து கிறிஸ்துவ கூட்டமைப்பு சார்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர் பிரேம்குமார் போதகர் தலைமையிலும்,
ஜோஸ்வா,விஎஸ் ஐசக்,செந்தில் ,ஜேக்கப்,செல்வமணி,தேவா ஆசீர்வாதம், அற்புதராஜ் ஆகியோர் முன்னிலையிலும் மணிப்பூரில் நடைபெற்று வரும் மனிதநேயமற்ற செயலை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த கூட்டத்தில் இஸ்லாமியர் கூட்டமைப்பு சார்பிலும் சிறுபான்மையினர் சார்பிலும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு மணிப்பூருக்கு ஆதரவாக பதாகைகள் கையில் ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மணிப்பூர் இடிக்கப்பட்ட தேவாலயங்கள் திரும்ப கட்டித்தர வேண்டும் என்றும் அந்த மக்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் கண்டன உரைகள் எடுக்கப்பட்டது.