அமாவாசையை முன்னிட்டு 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு அன்னதானம் வழங்கல்!

வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலம் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் 500 ஏழை, எளியோருக்கு நண்பகல் நேரத்தில் 12 மணிக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகிறார். இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை திமுக காட்பாடி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் காட்பாடி ஏகேஏ பில்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான அன்பு தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தார். இதையடுத்து மாமன்ற உறுப்பினர் அன்பு வழங்கிய அன்னதானத்தை ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்டு மகிழ்ந்தனர்.
பலர் வரிசையில் நின்று காத்திருந்து அன்னதானத்தை பெற்று கொண்டனர்.அன்னதானத்தை உட்கொண்ட ஏழை, எளியோர் தொழிலதிபர் அன்புவை மனதார வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.