அம்பைப் பகுதிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் ராஜகோபாலசாமி திருக்கோவில் மற்றும் பிரம்மதேசம் கைலாசநாதர் திருக்கோவில் திருப்பணிகள் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி திருக்கோவில் ராஜகோபரப்பணிகள் ஆகியவற்றை நேற்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு கோயில்களிலும் அதில் நடைபெற்று வரும் பணிகளையும் அரசின் நிதி ஒதுக்கீடுகளையும் மற்றும் கோவிலின் தல வரலாறுகளையும் அமைச்சர் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் இந்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் திருநெல்வேலி இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி உதவியாளர்கள் ஜான்சி ராணி, கவிதா, ஆய்வாளர் கோமதி, கோவில் நிர்வாக அதிகாரிகள் ரேவதி, கணேஷ் குமார், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன், அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், நகர சபை தலைவர் கே கே சி பிரபாகரன்,
மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், வி.கே.புரம் நகராட்சி சேர்மன் செல்வகணேஷ் பெருமாள், நகர செயலாளர் கணேசன், பிரம்மதேசம் பஞ்சாயத் தலைவர் ராம் சங்கர்,
மன்னார் கோவில் பஞ்சாயத்து தலைவர் ஜோதி கல்பனா பூதத்தான், வாகைகுளம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி நந்தகுமார், விளாங்குடி பஞ்சாயத்து தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகாஷ், கஸ்தூரி, மாரியம்மாள்,
அம்பை நகராட்சி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன் நகராட்சி கவுன்சிலர்கள் ராமசாமி, கோதர் இஸ்மாயில், முத்துகிருஷ்ணன், உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.